சினிமா செய்திகள்

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ ‘ஓ.டி.டி’யில் வெளிவருகிறது

பகவதி அம்மனின் வரலாற்றை ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.

தினத்தந்தி

கன்னியாகுமரியில் இருந்து அருள்புரியும் பகவதி அம்மனின் வரலாற்றை மூக்குத்தி அம்மன் என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்ய, ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை தீபாவளி விருந்தாக, ஓ.டி.டியில் வெளியிட முயற்சி நடைபெறுவதாக தகவல் பரவியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் பேய் படங்களும், தாதாக்களின் கதைகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், பக்தி படமாக மூக்குத்தி அம்மன் வெளிவருவது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது