வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் நடித்துள்ள அயோக்யா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கடந்த 10-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்தன. தியேட்டர் வாயிலில் ரசிகர்கள் விஷால் கட்-அவுட்கள், கொடி தோரணங்களும் அமைத்து இருந்தனர்.