சென்னை,
நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி, ‘கேங்கர்ஸ்’ படத்தை தொடர்ந்து மீண்டும் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘இருட்டு’, ‘தலைநகரம்-2’ போன்ற படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்குகிறார்.
இந்த புதிய படம் திகில் நிறைந்த ஹாரர் கதையாக உருவாக இருக்கிறது. இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தில் தொடங்க உள்ளது.
மேலும், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சுந்தர் சி ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை முடித்துவிட்டு, தற்போது விஷால் மற்றும் தமன்னா நடிக்கும் ‘புருஷன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.