சினிமா செய்திகள்

விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகை கோமல் ராணியுடன் திருமணம் செய்துகொள்ள போகும் தகவல் பாலிவுட் சினிமாவில் பல விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த விவாகரத்து மனுவை தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

பாலிவுட்டில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவரது வளைந்து ஆடும் நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டவர்.

இவர் அடிக்கடி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவார். மனைவியை பிரிந்திருக்கும் 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை கோமல் ராணியுடன் தற்போது சுற்றிக்கொண்டு இருக்கிறார். இது பாலிவுட் சினிமாவில் பல விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது.

இதற்கிடையில் கோவிந்தாவும், கோமல் ராணியும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இது நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா ஒரு நடவடிக்கையை கையாண்டுள்ளார்.

விவாகரத்து மனு வாபஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த விவாகரத்து மனுவை தற்போது கோவிந்தா மனைவி வாபஸ் பெற்றுள்ளார்.

“சுனிதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இனி சட்டத்தை மீறி செயல்பாடுகளில் கோவிந்தா களமிறங்கினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்” என்று சுனிதா அஹூஜாவின் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT