சினிமா செய்திகள்

'சீன்' பட வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூர்யா வழிபாடு

நடிகர் சூர்யா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணியளவில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி,

தீபாவளிக்கு வெளியாகவுள்ள தனது 'சீன்' (Scene) திரைப்படத்தின் வெற்றி வேண்டி பாரம்பரியமாக வெள்ளை உடை அணிந்து சாமி தரிசனம் செய்தார்.

‘சீன்’ படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜகரம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. அதிரடி, நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இன்பராஜ் பாண்டியன் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். குற்றவாளிகளைக் கையாள்வதில் அதிரடியான அணுகுமுறையைக் கொண்ட காவல் அதிகாரியாக அவர் நடித்திருப்பதாகப் படத்தின் முன்னோட்டம் தெரிவிக்கிறது.

நவம்பர் 6ல் ரிலீஸ்

வரும் நவம்பர் 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக ‘சீன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் சாமி தரிசனம்

இந்த நிலையில், நடிகர் சூர்யா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணியளவில் சாமி தரிசனம் செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள தனது 'சீன்' (Scene) திரைப்படத்தின் வெற்றி வேண்டி பாரம்பரியமாக வெள்ளை உடை அணிந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

SCROLL FOR NEXT