சினிமா செய்திகள்

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை... ரூ.200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்

ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்த படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு வசூல் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'சீன்' ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.360 கோடியைக் கடந்த 'கருப்பு'

அதாவது, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் 'கருப்பு'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் உலக அளவில் ரூ.360 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

வசூலில் அசத்திய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'

இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் வசூலில் கவனம் ஈர்த்தது. இப்படம் உலக அளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடித்தது.

5 நாட்களில் ரூ.205 கோடி வசூல்

தீபாவளி வெளியீடாக வந்த 'சீன்' திரைப்படமும் வசூலில் அசத்தி வருகிறது. வெளியான 5 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.205 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்த படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். இந்த ஹாட்ரிக் வெற்றி அவரது திரைப்பயணத்தில் முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT