சினிமா செய்திகள்

சூர்யாவின் “கருப்பு” படம்: திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகவுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ திரைப்படத்தின் ‘கருப்பா கூட வா’ 4வது பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தில் அட்வகேட் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.