சினிமா செய்திகள்

சூர்யாவின் “சீன்” படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ படம் வரும் நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சூர்யா 47

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

நவம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முன்பதிவில் ரூ.10 கோடி வசூல்

இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் முதல் ஒரு வாரத்துக்கு காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி இருக்கும் நிலையில் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.10 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

இந்த நிலையில், சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது. படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை கேட்டு படக்குழு சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. அதில் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் அது இணையத்தில் வெளியாகும் பட்சத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ‘சீன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது. படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்திரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT