நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிப்போன நிலையில், வருகிற மே மாதம் 14-ந்தேதி 'கருப்பு' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 'கருப்பு' திரைப்படத்தின் தெலுங்கு டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்துக்கு தெலுங்கில் 'வீரபத்ருடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.