சென்னை,
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டி ஆடியோக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முத்துக்குமரன் இளம்பெண் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தீபாவளியின்போது "வழக்கமாக தீபாவளி தினத்தன்று கறி விருந்து சாப்பிடும் நான், தற்போது நேரம் சரியில்லாததால் இட்லி சாம்பார் சாப்பிடுகிறேன்” என முத்துக்குமரன் பதிவிட்ட வீடியோ அந்தப் பெண்ணை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- முத்துக்குமரன் மீது முறைப்படி ஆன்லைன் அல்லது நேரடியாகப் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து வழிகாட்டுங்கள். என்னிடம் எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், நியாயம் கிடைக்கப் போராடுவேன். தாலி கட்டும் நிபந்தனையின் பேரிலேயே உன்னுடன் (முத்துக்குமரன்) பழகினேன். எனவே, தாலியுடன் என்னிடம் சரணடைந்து விடு. இல்லையெனில் தனியாகவே எதிர்த்துப் போராடுவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஒரு புதிய ஆடியோ பதிவை இளம்பெண் நேற்று வெளியிட்டார். அதில் வழக்கம் போல இளம்பெண் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவதும், முத்துக்குமரன் திக்கி திணறி தவித்து பேசுவதுமாக இருக்கிறது. இந்த புதிய ஆடியோவும் வைரலாகி வருகிறது.