சினிமா செய்திகள்

ரியா ஷிபு-க்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா - ஜோதிகா தம்பதி

ரியா ஷிபு "சர்வம் மாயா" படத்தில் "டெலுலு" என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்

அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த "சர்வம்" மாயா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. தியேட்டர்களில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், "சர்வம் மாயா" படத்தில் டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை ரியா ஷிபுவிற்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான எச்ஆர் பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். விக்ரம் நடிப்பில் வெளியான "வீர தீர சூரன்" படத்தை ரியா ஷியு தான் தயாரித்தார். ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் பேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT