சினிமா செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: நடிகர், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் – விவரம்

ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.

நாளைய தேர்தலில் நடிகர், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

ரஜினி – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

கமல், ஸ்ருதி ஹாசன் – சென்னை மாநகராட்சி பள்ளி, ஆழ்வார்பேட்டை

சரத்குமார், ராதிகா – நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொட்டிவாக்கம்

விஜய் – மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலாங்கரை

அஜித் – திருவான்மியூர்

சிவகார்த்திகேயன் – குட் ஷெப்பர்ட் பள்ளி, வளசரவாக்கம்

விஜய் சேதுபதி – சென்னை மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம்

பிரபு, விக்ரம் பிரபு – தக்கர்பாபா வித்யாலயா பள்ளி, தி.நகர்

விக்ரம், துருவ் விக்ரம், அர்ஜூன் தாஸ் – தியோசாபிக்கல் சொசைட்டி மேல்நிலைப்பள்ளி

விஷால் – அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள வள்ளியம்மாள் பள்ளி

குஷ்பு – சாந்தோம் மாநகராட்சி பள்ளி

திரிஷா – செயிண்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை

அதர்வா – வளசரவாக்கம்

கவின் – அடையாறு

அசோக் செல்வன் – எல்.சி.வி.கே. தொடக்கப்பள்ளி, காட்டுப்பாக்கம்

ஜி.வி. பிரகாஷ் – சாரதா வித்யாலயா மாடல் பள்ளி, தி.நகர்

ஐஸ்வர்யா ராஜேஷ் – சி.டி. நாயகம் மேல்நிலைப்பள்ளி, தி.நகர்

கார்த்திக், கவுதம் கார்த்திக் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

இதன் மூலம், திரைத்துறையினர் பலரும் வாக்களிக்க தயாராக உள்ளனர்

SCROLL FOR NEXT