சினிமா செய்திகள்

தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் ரூ. 20 லட்சம் நிதி உதவி

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைக்க நடிகர் கமல்ஹாசன் ரூ. 20 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.


சென்னை

உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழிகளாகவும் விளங்கும் தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய ஏழு மொழிகளில் தமிழைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இதுவரை இருக்கை அமையவில்லை.

இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக தென்கிழக்காசிய கல்வித்துறையில் ஓர் அங்கமாக தமிழ் இருக்கை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.

அதன்படி தமிழ் இருக்கை நிறுவுவதற்கான மொத்த செலவு ரூ.45 கோடி ஆகும். இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை அவர்களது சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர். மீதி தொகையை உலகத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியானது. தமிழக அரசு மற்றும் தமிழ் ஆர்வலர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ. 9.75 கோடி கொடுக்கபட்டு உள்ளது

நடிகர் கமல்ஹாசன், இன்று ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில், இந்த நிதி உதவிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் அளித்தார்.

SCROLL FOR NEXT