சினிமா செய்திகள்

நானா படேகரை விமர்சித்த தனுஸ்ரீ தத்தா - அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கண்டனம்

படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார்.

மறைந்த நடிகர் நானா படேகர் பற்றிய தனுஸ்ரீ தத்தாவின் விமர்சனத்துக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நடிகர் நானா படேகர் கடந்த அக்டோபர் 8ம் தேதி காலமானார்.

நானா படேகர் குறித்து தனுஸ்ரீ தத்தா விமர்சனம்

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு குறித்து,“ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் செய்த குற்றங்கள் மறைந்துவிடாது. சிலர் என்னை அவரை மன்னித்துவிடும்படி கூறுகிறார்கள். ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை பொறுத்த வரை எனது வாழ்க்கையை நரகமாக்கிய ஒரு கொடிய அரக்கன் இப்போது அழிந்துவிட்டான். அவர் மறைந்த பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை”என கடுமையாக பேசியிருந்தார்.

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு

2008-ம் ஆண்டு நடந்த 'ஹாரன் ஒகே பிளீஸ்' திரைப்பட குத்து பாடல் படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018-ம் ஆண்டு நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி போலீசார் அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து இருந்தனர்.

அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கண்டனம்

இது குறித்து அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

“நானா படேகர் மிகவும் மதிக்கதக்க குடிமகன். அவர் சமூக ஆர்வலராக இருந்துள்ளார். பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். ஒட்டுமொத்த நாடும் அவரது இறப்பில் அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால், தனுஸ்ரீ பேசியது அவரது மனநிலையைப் பிரதிபலிக்கிறது.மோசமான விளம்பரத்துக்காக தனுஸ்ரீ தத்தா அப்படியான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இந்த மாதிரி இந்திய நாட்டின் திரைத்துறை வரலாற்றிலேயே யாரும் பேசியதில்லை.

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு இப்படி பேசுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது நாட்டில் உள்ள அனைவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் இருந்து இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது திரைத்துறையின் கலாசாரம் அல்ல; தனுஸ்ரீ தத்தாவின் கலாசாரம். அவரது வார்த்தைகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என சங்க தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT