சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்த “சத்தியவான் சாவித்திரி” படத்தின் டீசர் அப்டேட்

பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘சத்யவான் சாவித்திரி’.

இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

‘சத்யவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.

மேலும், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம். சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 20ல் வெளியீடு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதலில் ஜூலை 24-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து, ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டீசர் அப்டேட்

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி மற்றும் வித்தியாசமான கதைக்களம் காரணமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT