சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், ‘தாய் கிழவி’ படம் 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், ரூ.22 கோடி குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.