சினிமா செய்திகள்

‘ஜார்ஜ்குட்டியை குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி..!’ - மோகன்லால் நெகிழ்ச்சி பதிவு

திரிஷ்யம் படத்தில் நடிகர் மோகன்லால் ‘ஜார்ஜ்குட்டி’ என்ற கதபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் திரிஷ்யம் . இப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற நிலையில் திரிஷ்யம் 3 தயாரானது. இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மீனா , எஸ்தர் அனில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கேரளாவில் மட்டுமின்றி வெளியான வெளி மாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் மோகன்லால் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மிகுந்த அன்பு மற்றும் நன்றியுணர்வோடு 'திரிஷ்யம் 3' உருவாக்கப்பட்டது. அதற்கு நீங்கள் கொடுத்து வரும் அன்பு என்னை ஆழமாக நெகிழ வைத்துள்ளது "பாக்ஸ் ஆபிஸ் வசூலைவிட, உங்கள் விமர்சனங்களும் உணர்வுகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. ஜார்ஜ்குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்கள் குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT