சினிமா செய்திகள்

நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு வழங்கிய ரஜினிகாந்த் சாருக்கு நன்றி - நடிகை மிர்ணா

ஜெயிலர் 2 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மிர்னா மேனன், ரஜினிக்கும் , ஜெயிலர் 2 படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

"ஒரே சூரியன். ஒரே நிலவு. ஒரே சூப்பர் ஸ்டார். 'ஜெயிலர் 2' திரைப்படத்தை ஒரு மெகா பிளாக்பஸ்டராக மாற்றியமைத்தமைக்கு நன்றி. ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி; நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்!

படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிர்ணா மேனனின் பதிவு

இந்த நிலையில், ஜெயிலர் 2 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மிர்னா மேனன், ரஜினிக்கும் , ஜெயிலர் 2 படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே சூரியன். ஒரே நிலவு. ஒரே சூப்பர் ஸ்டார். 'ஜெயிலர் 2' திரைப்படத்தை ஒரு மெகா பிளாக்பஸ்டராக மாற்றியமைத்தமைக்கு நன்றி. ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி; நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. அன்பிற்குரிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களுக்கு நன்றி; 'ஜெயிலர்' படைப்பில் என்னை ஒரு அங்கமாக்கியதற்கும், என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்குமான நன்றி. மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனமாகச் செயல்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT