சினிமா செய்திகள்

அந்த படம் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கும்.. ஆனால்- இயக்குனர் மிஷ்கின்

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார்.

சென்னை,

தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் ஆங்கில படங்களுக்கு இணையான விறுவிறுப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்துபவை.

இவர் தற்போது, படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். தற்போது நடிகை கீர்த்தி சுரேசுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், நடிகர் சூர்யாவின் கருப்பு படம் குறித்தும் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படம் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'கருப்பு' படத்திற்காக சூர்யாவிற்கு கிடைத்த வெற்றியை பார்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.. அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர்.. சமீபகாலமாக அவர் சில பின்னடைவுகளைச் சந்தித்தார். ஆனால் பாலாஜி அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

மேலும், அதைவிடவும் வெற்றிமாறன் என்னிடம் விவரித்த 'வாடிவாசல்' கதையை மிக அற்புதமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட கதை அது.. மிக அழகான ஒரு கதை.. அது சூர்யாவிற்கு எல்லா காலத்திற்குமான ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.. இருப்பினும், அது இப்போதும் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT