சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான ‘வேலும் மயிலும்' ஆல்பம் பாடல் வெளியானது

தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் வகையில் உருவான ‘வேலும் மயிலும்’ என்ற புதிய பக்தி பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் வகையில் உருவான ‘வேலும் மயிலும்’ என்ற புதிய பக்தி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

மேலும், இந்த பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் பக்தி உணர்வுகளையும், தமிழின் பாரம்பரிய இசை நயத்தையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படியாக வெளியான இந்த தனிப்பாடலை, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.