சென்னை,
'லிப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் மாஸ்க் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், கவின் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, அறிமுக இயக்குனர் பிரவீன் பரமசிவம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜெய்வர்தா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள், மற்றும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.