சினிமா செய்திகள்

“மரகத நாணயம் 2” படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர்,உள்ளிட்டோர் ‘மரகத நாணயம் 2’ படத்தில் நடிக்கின்றனர்.

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தையும் தயாரிக்கிறது. ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் உள்ளிடோர் நடிப்பதாகவும், சத்யராஜும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.