சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்த 'கான் சிட்டி'படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார்.

சென்னை,

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ள படம் 'கான் சிட்டி' (Con City). இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளது. புதுமையான கதைக்களத்துடன் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கான் சிட்டி' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற ஜூன் மாதம் 26ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.