சினிமா செய்திகள்

“தனுஷ் 55” படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் தனுஷ், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை'. "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகேடேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனுஷ் 55 என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் 55 படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட், படத்தின் டைட்டிலாக இருக்குமோ என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.