சினிமா செய்திகள்

வித் லவ் படத்திற்கு "யு" தணிக்கை சான்றிதழ்

பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 6ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ‘வித் லவ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ‘அய்யோ காதலே’, ‘மறந்து போச்சே’ பாடல்கள் வெளியாகி வைரலானது.

பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 6ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் டிரெய்லர் பிரபல இயக்குனர் அட்லீ வெளியிட்டார். இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வித் லவ் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.