சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டல் ராதா' படத்தின் முதல் பாடல் வெளியானது

'பாட்டல் ராதா' படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'யோவ் பாட்டலு' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாக்கியம் சங்கர் எழுதியுள்ள இந்த பாடலை கானா பாலமுருகன், கானா செல்ல முத்து, கானா அபிலோ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT