சினிமா செய்திகள்

எச்.வினோத் - சூர்யா கூட்டணி.. ஜனநாயகனுக்கு பிறகு பெரிய அப்டேட்?

ஜனநாயகன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆவேசம் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படமும் இந்தாண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜனநாயகன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் வெளியானதும் எச். வினோத் இப்படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த பெரிய இயக்குனர்களுடன் சூர்யா இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.