சென்னை,
2026-ம் ஆண்டு இந்தியத் திரையுலகிற்கு வசூல் ரீதியாக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, உலகளாவிய வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன.
குறிப்பாக, ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ரூ.1,820 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.755 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் டாப் 10 பட்டியலைப் பார்க்கலாம்.
1. துரந்தர்: தி ரிவெஞ்ச் – ரூ.1,820 கோடி
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வசூலில் முதலிடத்தில் உள்ளது. ரூ.1,820 கோடி வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகத் திகழ்கிறது.
2. ஜெயிலர் 2 – ரூ.755 கோடி
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.755 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. திரிஷ்யம்: தி கன்க்ளூஷன் – ரூ.577 கோடி
அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ரூ.577 கோடி வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. ஹனுமான் அன்ஷ் – ரூ.452 கோடி
‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் ரூ.452 கோடி வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது.
5. பார்டர் 2 – ரூ.450 கோடி
நாட்டுப்பற்றை மையமாகக் கொண்டு உருவான ‘பார்டர் 2’ திரைப்படம் ரூ.450 கோடி வசூலுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
6. கருப்பு – ரூ.360 கோடி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரூ.360 கோடி வசூலித்து ஆறாவது இடத்தில் உள்ளது.
7. டாக்ஸிக் – ரூ.342 கோடி
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரூ.342 கோடி வசூலுடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
8. பெத்தி – ரூ.341 கோடி
ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரூ.341 கோடி வசூலித்து எட்டாவது இடத்தில் உள்ளது.
9. மிர்சாபூர் – தி மூவி – ரூ.339 கோடி
பிரபல தொடரைத் தொடர்ந்து வெளியான ‘மிர்சாபூர் – தி மூவி’ திரைப்படம் ரூ.339 கோடி வசூலுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
10. பெத்லகேம் குடும்ப யூனிட் – ரூ.330 கோடி
நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ரூ.330 கோடி வசூலித்து பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.