சினிமா செய்திகள்

‘தி இந்தியா ஸ்டோரி’: காஜல்–ஸ்ரேயாஸ் கூட்டணியில் புதிய படம்

டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை குறைத்தார். அளவான படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார்.

சாகர் பி.ஷிண்டே தயாரிப்பில் டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சாகர் பி.ஷிண்டே கூறும்போது, “நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்க