சினிமா செய்திகள்

மீண்டும் ரியோவுடன் ஜோடி சேரும் 'ஜோ' பட நடிகை

ரியோ, மாளவிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோ'. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'பிளாக் ஷீப்' கலையரசன் தங்கவேல் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் 'ஜோ' பட ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சித்துகுமார் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை