சினிமா செய்திகள்

தி கிங் அரைவ்ஸ்... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடும் 'கங்குவா' படக்குழு

'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அறிவிப்பு நாளை (20.07.2023) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT