சென்னை,
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) வரலாற்றிலேயே அதிக ரன் டைம் கொண்ட படமாக உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளது.
ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்கள் இப்படத்தையும் இயக்கியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் ரன் டைம் தோராயமாக 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அதிக ரன் டைம் கொண்ட படமாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ இருந்து வருகிறது. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடியது. தற்போது ‘டூம்ஸ்டே’ படத்தின் ரன் டைம் குறித்த தகவல் உண்மையானால், ‘எண்ட்கேம்’ படத்தின் சாதனையை இது முறியடிக்கும்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.