கோப்புப்படம்  
சினிமா செய்திகள்

'தேசிங்கு ராஜா - 2' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

'தேசிங்கு ராஜா - 2' படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான 'தேசிங்கு ராஜா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இன்பினிட்டி கிரியேசன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 'தேசிங்கு ராஜா - 2' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு