சினிமா செய்திகள்

டி.கே.சிவக்குமார் தலைமையிலான புதிய அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- நடிகர் சிவராஜ்குமார்

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் நேற்று மாலை பதவி ஏற்றுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் நேற்று மாலையில் பதவி ஏற்றுக் கொண்டார். மக்கள் மாளிகையில் (லோக் பவன்) நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கன்னட பிரபல நடிகர்களான சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக விவசாயம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் ஆகும். ஏனெனில் கல்வியால் தான் ஏழை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற முடியும். அதனால் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.