வாஷிங்டன்,
ஹாலிவுட் திரைத்துறையில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தின் உருவாகியுள்ள திரைப்படம் ’தி ஒடிசி’. இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 17ம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் (நேற்று வரை) உலகம் முழுவதும் ரூ. 2,700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது. ’தி ஒடிசி’ திரைப்படம் ரூ. 2,100 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.