சென்னை,
இந்த படத்திலிருந்து பாட்டில் கேங் பாடல் வெளியாகி உள்ளது, இந்த பாடலை வரிகளுக்கான வரிகளை பாடகி தீ எழுதி பாடியுள்ளார்
இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெலிவரி பாய்'. இப்படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், துஷ்யந்த், காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில் உணர்வுப்பூர்வமான கதையுடன் உருவாகியுள்ள இப்படம், தனது தாயைக் காப்பாற்றப் போராடும் ஒரு டெலிவரி பாய் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
சென்னை மற்றும் கோவையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்தம் 42 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரசன்ன குமார் கவனித்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை வசந்த் மேற்கொண்டுள்ளார்.
முதலில் இப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் லியோ சிவகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகளுடன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தனர். அதன்படி, 'டெலிவரி பாய்' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்திலிருந்து பாட்டில் கேங் பாடல் வெளியாகி உள்ளது, இந்த பாடலை வரிகளுக்கான வரிகளை பாடகி தீ எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.