சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளனர். வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே வெளியாகியிருந்த 'தி வெட்டிங் சாங்' மற்றும் 'பட்டாம்பூச்சி' பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அந்த வரிசையில் தற்போது படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகியுள்ளது.
ஆற்றல் மிக்க இசை, உற்சாகமான வரிகள் மற்றும் சூர்யாவின் மாஸ் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இந்த பாடல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.