சென்னை,
'தர்மன்' படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த், ராஷி கண்ணாவிற்கு ஆன்மிகம் தொடர்பான ஒரு புத்தகத்தை ரஜினிகாந்த் தனக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கண்ணா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் ஆன்மிகம் குறித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். அந்த உரையாடலின் முடிவில், ஆன்மிகம் தொடர்பான ஒரு புத்தகத்தை ரஜினிகாந்த் தனக்கு பரிசாக வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்தின் எளிமை மற்றும் அன்பான அணுகுமுறை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ராஷி கண்ணா, அவர் பரிசளித்த ஆன்மிகப் புத்தகம் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் நேர்மறையான சிந்தனையையும் உருவாக்கியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.