சினிமா செய்திகள்

புதிய போஸ்டரை வெளியிட்ட 'கருடன்' படக்குழு

'கருடன்' பட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார் .. இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. எனினும், எந்த தேதியில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்படவில்லை. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

SCROLL FOR NEXT