image courtecy:twitter@beemji 
சினிமா செய்திகள்

போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'தங்கலான்' படக்குழு

நடிகை பார்வதியின் பிறந்தநாளையொட்டி, 'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 'தங்கலான்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகை பார்வதியின் பிறந்தநாளையொட்டி, 'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கங்கம்மா, மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT