சினிமா செய்திகள்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார்.

சென்னை,

2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘லீடர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார். ‘லீடர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், “நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தமே இப்படத்தின் மையக் கதை. அதிரடி-ஆக்‌ஷன் பின்னணியில், ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இடம்பெறும்” என தெரிவித்துள்ளனர்.