சினிமா செய்திகள்

லிஜோமோல் ஜோஸ் நடித்த “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

சென்னை,

மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்த நடிகைகளில் ஒருவரான லிஜோமோல் ஜோஸ், தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் இயக்குநர் சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு வெளியான 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேனி' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

இந்த நிலையில், இயக்குநர் ஆதிரன் ரக்கேப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள "தி ஒன் : வித்தின் யூ" திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹர்ஷினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாவேல் நவகீதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் லிஜோமோல்

இந்தப் படத்தைத் தொடர்ந்து, லிஜோமோல் ஜோஸ் 'உமன்மதம்' என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்ச்சியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் லிஜோமோல் ஜோஸ், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறார்.