தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'போர்த் ப்ளோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், சைக்கலாஜிகல் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது..
'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள 'போர்த் ப்ளோர்' படம் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.