image courtesy:twitter/@DCOfficial 
சினிமா செய்திகள்

டிசி ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான 'சூப்பர்கேர்ள்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இத்திரைப்படம் வருகிற ஜூன் 26ம் தேதி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சென்னை,

இந்த திரைப்படம், ஜேம்ஸ் கன் தயாரிப்பில், கிரேக் கிலெஸ்பி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை மில்லி அல்காக் சூப்பர்கேர்ள் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல காமிக் எழுத்தாளர் டாம் கிங் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர்கேர்ள் கதையின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த படம் அதிகமான ஆக்‌ஷன், உணர்ச்சி மற்றும் வித்தியாசமான காட்சிகளுடன் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஜூன் 26ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமான ‘சூப்பர்கர்ல்’ படத்தின் அதிரடி தமிழ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் டிசி ஸ்டுடியோஸ் மீண்டும் ஒரு மாபெரும் ஹிட் படத்தை வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.