சினிமா செய்திகள்

அக்சய் குமார் நடித்துள்ள 'பூத் பங்களா' படத்தின் டிரெய்லர் வெளியானது

நகைச்சுவை, திகில், த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படம் வருகிற 16ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மும்பை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

அதனை தொடர்ந்து நடிகர் அக்சய் குமார் பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'பூத் பங்களா' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதன் மூலம் அக்சய் குமார் 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார். கடைசியாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பூல் பூலையா படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை, திகில், த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த 'பூத் பங்களா' படம் வருகிற 16ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் அக்சய் குமார் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT