சினிமா செய்திகள்

"காதல் கதை சொல்லவா" படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படம் வரும் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில், ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கதை சொல்லவா”. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நடிகர் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

நடிகைகள் ஆத்மிகா மற்றும் ரித்திக்கா சென் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சனில் களம் பீல்-குட் காதல் கதையாக இயக்கியுள்ளார். எம். ஜெயசிந்திரன்- சரத் இணைந்து இசையமைத்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படம் வரும் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

SCROLL FOR NEXT