சினிமா செய்திகள்

ராம் சரண் நடித்துள்ள "பெத்தி" படத்தின் டிரெய்லர் வெளியானது

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.