சினிமா செய்திகள்

ரியோ ராஜ் நடித்த “ராம் இன் லீலா” படத்தின் டிரெய்லர் வெளியானது

ரியோ ராஜ் நடித்த “ராம் இன் லீலா” வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை,

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய 'ராம் இன் லீலா' படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் ரியோ ராஜ்

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

காதலை மையமாகக் கொண்ட 'ராம் இன் லீலா'

தற்போது ரியோ ராஜ், ராம் இன் லீலா என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்

ராம் இன் லீலா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இந்த படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் கலந்த பொழுதுபோக்கு கதையுடன் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டிரெய்லர் வெளியானது

இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. காதல், காமெடி கதைக்களத்தில் வெளியான இந்த டிரெய்லர் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.