சினிமா செய்திகள்

‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் வெளியானது

ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.

இனிது இனிது, டெவில் உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகர் த்ரிகுண், கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜி. ராஜசேகர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனு விஷுவல்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. எம். ஆர். ரமேஷ் மற்றும் ஆர். அருண் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், மூன்று கதாநாயகிகளிடம் சிக்கிக் கொள்ளும் ஹீரோ எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே கதையாக அமைந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த நிலையில், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT