சினிமா செய்திகள்

அஜய் கார்த்தி நடித்த "டார்க்" படத்தின் டிரெய்லர் வெளியானது

இந்த படத்திற்கான கதையை “டாடா” பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார்.

சென்னை,

ஹாரர் கதைக்களத்தில் உருவான ‘டார்க்’

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘டார்க்’. இந்த படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான கதையை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு எழுதியுள்ளார். நடிகை அஞ்சனா முருகன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், இயக்குநர் கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைக்கலாஜிகல் ஹாரர் படமாக உருவானது

எம்ஜி ஸ்டூடியோஸ் மற்றும் 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில், பல அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக ‘டார்க்’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், தற்போது ‘டார்க்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மர்மம், பரபரப்பு மற்றும் திகில் கலந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர், மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருவதுடன் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT